cinema

img

கண்டுகொள்ளாமல் போகும் உயிர்நேயம்!

ஆல் தட் பிரீத்ஸ்  (All that breathes) (2022).. ஆஸ்கர் படங்களுக்கான இந்தியப் படப் போட்டியில் பல படங்கள் முன் நின்றது. இறுதியில் ஆர்ஆர்ஆர் படப் பாட லும் எலிபண்ட் விஸ்பரஸ் ஆவணப்படமும் இந்திய பட்டியலில் ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளன. எலிபண்ட் விஸ்பரஸ் படத்தின் வெற்றி பெருமளவில் கொண்டாடப்படுகிறது. மறுபக்கத்தில் ஆர்ஆர்ஆர் படப் பாடலின் வெற்றி கடுமையாக விமர்சனத்துக் குள்ளாகி வருகிறது. குறிப் பாக அப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி ஆர்எஸ்எஸ் சார்பு கொண்டவர் என்கிற நிலையில், அவருடைய படப் பாடலுக்கு விருது வழங்குவ தின் வழியாக ஆஸ்கர் விருதுக் குழு இந்தியாவின் இந்துத்துவ ஆட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறதா என்கிற சாரத்துடன் எழுப்பப்படும் விமர்சனங்களே அதிகம். அப்படி விமர்சனங்கள் எழுப்பிய வர்களில் முக்கியமானவர் ஆனந்த் பட்வர்தன், இந்தியாவின் பிரபலமான ஆவணப்பட இயக்குநர், இந்துத்துவ வெறியை தோலுரிக்கும் ராம் கி நாம் (raam ki naam- on the name of God) போன்ற பல ஆவணப்படங்கள் எடுத்தவர், சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றவர். “No Oscar for ‘All That Breathes’ but Oscar for RRR are slaps on the face of secular India,” என ட்வீட்டிட்டார். ‘ஆல் தட் பிரீத்ஸ் படத்துக்கு ஆஸ்கர் வழங்காமல் ஆர்ஆர்ஆர் படத்துக்கு அந்த விருது வழங்கப்பட்டிருப்பது மதச்சார்பற்ற இந்தியா மீது தொடுக்கப்பட்டிருக் கும் தாக்குதல்’ என்பது போன்ற அர்த்தம். அது என்ன ‘ஆல் தட் பிரீத்ஸ்’ படம் ஒரு வகையில் சூழலியல் படம் என சொல்லலாம், இந்தியாவின் தலைநகரமான தில்லியில் இருக்கும் இரு சகோதரர்கள், ஒரு முக்கியமான பணியை செய்து கொண்டிருக்கின்றனர்.

பருந்துகளை பராமரிக்கும் பணி, அசுரத்தனமாக நகரமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தில்லியில் பெருமளவுக்கு சுற்றுச்சூழல் கேடு விளைவிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது, அனுதினமும் வானுயரும் அளவு குப்பைகள் குவியும் நகரமாக தில்லி இருக்கிறது, மனிதர் களும் அத்தகைய சூழலில் வாழ்வது சிக்கலாக இருக்கும் நிலையில், தில்லியில் வாழும் பிற உயிரினங்களின் நிலை என்னவென்பதைத்தான் ஆல் தட் பிரீத்ஸ் படம் பெரும்பாலும் பேசி யிருக்கிறது. நாம் காணும் வழக்கமான காட்சிகள்தான், மனிதர்களை மையப்படுத்திதான் நம் பார்வை இருக்கிறது, அதே வகை மனித மையக் காட்சி யாக தொடங்கி, கேமரா சட்டென ஃபோகஸ்-ஐ ஷிஃப்ட் செய்து குப்பை மேட்டின் விளிம்பில் சாலையருகே ஊர்ந்து கொண்டிருக்கும் ஒரு சிறு ஆமையைக் காட்டும்போது அதிர்ந்து போகிறோம். இவையும் இங்குதானே இருக்கின்றன என்ற உண்மை படாரென அறைகிறது. சாலை செல்லும் ஒரு சிறு பாலத்துக்கு அடியிலுள்ள இருளடைந்த சாக்கடை தேக்கத்துக்கு கேமரா நகரும்போது மிகை யதார்த்தம் போல் பன்றிகளும் நாய்களும் அங்கு உலவு வது நெஞ்சை உலுக்குகிறது. இத்தகைய சூழ லியல் சீர்கேடுகளின் விளைவாக காற்றிலும் மாசு அதிகமாக கலக்கிறது. குறிப்பாக தில்லியின் காற்று மாசு உலகளவில் பிரசித்தி. அந்த காற்று மாசு பறவைகளை, குறிப்பாக பருந்துகளை என்ன செய்கிறது என்பதை காட்டுவதிலிருந்து இப்படம் மற்ற தளங் களுக்கு விரிகிறது. இரு சகோதரரர்களும் ஒரு உதவியாளரும் நகரம் முழுக்க சுற்றி, மாசினால் மூச்சுத்திணறியும் நோய்வாய்ப் பட்டும் விழுந்து கிடக்கும் பருந்துகளை நாள்தோறும் சேகரிக்கின்றனர்.அவற்றுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். அவர்கள் மருத்துவர் கள் கிடையாது. ஆனால் பருந்துகளை காப்பாற்றவென வனஉயிர்களுக்கான மருத்து வத்தையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.. இத்தனைக்கும் அவர்கள் வசதி நிறைந்தவர்கள் கூட கிடையாது. இருக்கும் வறுமையினூடாக உயிர் நேயத்தை எப்படி அவர்கள் தொடர் கின்றனர் என்பதுதான் படம். எல்லாம் சரி.. இதை எதற்கு ஆர்ஆர்ஆர்-டன் சம்பந்தமே இன்றி ஆனந்த் பட்வர்தன் ஒப்பிட்டார்?. காரணம் இருக்கிறது. ஆர்ஆர்ஆர் ஒரு சங்கிப் படம். உயிர்நேயத்தை பேசும் ஆல் தட் பிரீத்ஸ் இந்துத்துவ வெறியையும் ஆவணமாக்கியிருக்கிறது. படத்தில் வரும் இரு சகோதரர்களின் பெயர்கள் செளத் மற்றும் நதீம். இருவரும் இஸ்லாமியர். படம் 2019ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து நிகழ்வுகளை ஆவணப்படுத்துகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கிய அதே ஆண்டு. தங்களின் வாழ்க்கைகளே பெயர்த் தெடுக்கப்படும் பாசிச முயற்சியை எதிர்கொண்டும் மறுபக்கத்தில் உயிர்நேயத்தை காக்க இருவரும் போராடுவதுதான் அப்படம்.. ஆல் தட் பிரீத்ஸ் படம், மோடியை எதிர்க்கும் இந்தியாவிலிருந்து எழுப்பப்பட்ட குரல். மோடியாலும் ஆர்எஸ்எஸ்ஸா லும் பாஜகவாலும் அவமானத் தில் அனுதினமும் கூனிக்குறுகிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இந்தியனின் ‘நான் இவர்கள் அல்ல’ என்கிற கேவலே அப்படம்.. குறிப்பாக இந்திய அரசின் உருவாக்கம் தொடங்கிய வஞ்சிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். அமைப்புப் பூர்வ மாகவே ஒடுக்கப்படு பவர்கள் அவர்கள். கான்ஸ் திரைப்படவிழா, சண்டான்ஸ் திரைப்பட விழா, ஹாங்காங் சர்வதேச திரைப்படவிழா உள்ளிட்ட பல உலகப்படவிழாக்களின் விருதுகளை வென்ற படம். அமெரிக்காவின் ஆஸ்கர் விருதுக் குழு வுக்கு தெரியாமல் ஆர்ஆர்ஆர் விருதுக்குரிய தேர்வாக இருந்ததற்கு பின் இருக்கும் கார ணம் யதேச்சையானது அல்ல, அரசியல் பூர்வமானது. அதைத்தான் ஆனந்த் பட்வர் தன் முன்மொழிந்திருக்கிறார். நாமும் வழி மொழிவோம். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து இந்திய அளவில் எழுந்த போராட்டம் தில்லியில் வைத்து கலவரமாக்கப் பட்டு முடித்து வைக்கப்பட்டது. அக்கலவரம் நடக்கும்போது நாயகர்களில் ஒருவர் அடிபட்ட பருந்துகளை சேகரித்து ஆட்டோவில் வந்து கொண்டிருப்பார்.. மனைவி அவரை செல்பேசியில் அழைத்து கலவரம் பற்றிய செய்தியை சொல்லி எச்சரிப் பார். ‘இங்கு கலவரச் சூழல் தென்படவில்லை’ என அவருக்கு நம்பிக்கையளித்து அழைப்பை துண்டிப்பார் நாயகன்.. எங்கு அவர் கலவரத்துக்குள் சிக்கி விடுவாரோ என நமக்கு மனம் பதைபதைக்கும்.. ஆனால் அவர் தன் சட்டைப் பைக்குள் கையை விடுவார். ஒரு சிறு அணிலை எடுப்பார்.. அது ‘மூச் மூச்’ எனக் கத்தி கையில் ஊர்ந்து கொண்டிருக்கும். மீண்டும் சட்டைப் பைக்கருகே கையைக் அவர் கொண்டு செல்ல, தானே விரும்பி அணில் சட்டைப் பைக்குள் இறங்கி தஞ்சம் புகும். நமக்குள் ஏதோவொன்று உடைந்து கண்களில் நீர் கோர்க்கும். முகநூல் பதிவு: ராஜசங்கீதன்